இன்றுடன் முடிவடையும் காவல் ..செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்தது என்ன?

V. Senthil Balaji DMK Enforcement Directorate
By Karthick Aug 12, 2023 05:51 AM GMT
Report

இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணை

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை விசாரணை செய்யலாம் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக அமலாக்கத்துறை சென்னை சாஸ்திரி பவனில் வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

senthil-balaji-gets-moved-to-puzhal-today

 இந்த விசாரணையில் அவரிடம் இருந்து பல தகவல்களை அமலாக்கத்துறை பெற்றதாகவும் கூறப்படுகிறது.  

இன்று விசாரணை முடிவு 

இந்நிலையில், இன்றும் அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்டிருந்த 5 நாள் நிறைவடையும் நிலையில், செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார். இன்று மாலை 3 மணிக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு அவர் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

senthil-balaji-gets-moved-to-puzhal-today

இந்நிலையில், விசாரணையின் போது கிடைத்த தகவலை வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மேலும் விசாரணை மேற்கொள்ள மனு அளிக்கவுள்ளதாக தகவலும் வெளிவந்துள்ளது.