காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி மனு
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனு
முன்ஜாமின் நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால், நேரில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்ஜாமின் நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவேன் என்றும் செந்தில் பாலாஜி மனுவில் உறுதியளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை IBC Tamil
ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு IBC Tamil