காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி மனு
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனு
முன்ஜாமின் நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால், நேரில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்ஜாமின் நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவேன் என்றும் செந்தில் பாலாஜி மனுவில் உறுதியளித்துள்ளார்.
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகுகள் விபத்து : மீட்பு நடவடிக்கையில் விமானப்படையின் ஹெலிகொப்டர் IBC Tamil
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம் IBC Tamil