செந்தில் பாலாஜி கைது செல்லும்; காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் - மூன்றாவது நீதிபதி தீர்ப்பு!

V. Senthil Balaji Tamil nadu Madras High Court
By Sumathi Jul 14, 2023 11:07 AM GMT
Report

செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜி கைது

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,

செந்தில் பாலாஜி கைது செல்லும்; காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் - மூன்றாவது நீதிபதி தீர்ப்பு! | Senthil Balaji Case Madras Highcourt Verdict

இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால் 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயனுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்.

தீர்ப்பு

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை.

ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.