செந்தில் பாலாஜி ஜாமீன் மனு...அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

V. Senthil Balaji Tamil nadu Madras High Court
By Karthick Sep 04, 2023 06:19 AM GMT
Report

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி - ED  

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

senthil-balaji-case-madras-high-court-order

கடந்த 28-ஆம் தேதியுடன் அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவரின் காவலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அந்த காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  

தலைமை நீதிபதியிடம் முறையிடவும்

இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த மனுவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என தெரிவித்து, வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தார்.

senthil-balaji-case-madras-high-court-order

அதனை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இந்த மனுவில், தலைமை நீதிபதியிடம் முறையிடும் படி நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்ட நீதிபதி சுந்தர், ஜாமீன் தரும் அதிகாரம் உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்று வரும்படியும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு   

இந்நிலையில், தற்போது செந்தில் பாலாஜி அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அளித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதும் தவறு என உயர்நீதிமன்ற சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

senthil-balaji-case-madras-high-court-order

மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை முதன்மை நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் முதன்மை நீதிமன்ற அமர்விற்கு மாற்றி ஆணையை பிறப்பித்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குமரேஷ் பாபு மற்றும் சுரேஷ் குமார்.