செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குபதிவு

V. Senthil Balaji
By Fathima Jul 02, 2026 04:38 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ புகார்

சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள தவெக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றது, அவர்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கிய நிலையில் நேற்று தோழமை கட்சிகளுடனான கூட்டத்தையும் நடத்தியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

இந்நிலையில் தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலிசார் இதுவரையிலும் 5 பேரை கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குபதிவு

இதில் மூன்று பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை சந்தித்து பேசியதாகவும், அவர் அறிவுறுத்தலின் பேரிலேயே இளையராஜாவுடன் பேசியதாகவும் தெரிவித்தனர், இவர்களை நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்த வருகிற 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது கொலை மிரட்டல், குற்றச்சதிக்கு உடந்தையாக இருத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.