தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு
திமுக-வின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி
சட்டப்பேரவையில் சட்டப்பேரவை தலைவருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிசெய்த போலிசார் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் போலிசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் ஆஜராகாமல் இருந்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கால்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு நாளை விசாரணைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மனுதாக்கல்
இந்நிலையில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது, குதிரை பேரத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
சிறை காவலர்களின் தலைகள் மீது பெரிய கற்களால் தாக்கிய கைதிகள் : வெளிவரும் திடுக்கிடும் தகவல் IBC Tamil