நாமதான்.. நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்- செந்தில் பாலாஜி சூளுரை
எத்தனை பேராக வந்தாலும் நாமதான் ஜெயிக்கறோம் என செந்தில் பாலாஜி சூளுரைத்துள்ளார்.
முப்பெரும் விழா
திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும்
தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜி உரை
அந்த வகையில் தான் இன்று கரூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உரையாற்றிய செந்தில் பாலாஜி,
“2026ல் தி.மு.கழகத்தின் வெற்றிக் கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம். எதிரி யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் நாமதான் ஜெயிக்கறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்கறோம்.
2026-க்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வியூகம் தெரியாமல் எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்” என்றார்.