தள்ளுபடியான மனு...செந்தில் பாலாஜிக்கு பிணையை மறுத்த நீதிமன்றம்..!!
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவில் இன்று சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2015-ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்கப்பட்டது.
மறுக்கப்பட்ட பிணை
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், இது அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்பட்ட கைது என்றும், அமலாக்கத்துறை விசாரணையின் போது, செந்தில் பாலாஜியை பாஜகவில் சேரும் படி அழுத்தம் கொடுத்ததாகவும் அதிரடி கருத்துக்களை முன்வைத்தார்.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, இலாகா இல்லாத அமைச்சர் செந்திள் பாலாஜிக்கு பிணையை மறுத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், எதன் அடிப்படையில் அவரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் தீர்ப்பு நகல் பதிவேற்றம் செய்யப்படும் போது முழுமையாக வெளிவரும்.