பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா - அதிர்ச்சியில் திரையுலகம்
திரைப்பட காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடுபத்தாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கபட்டு வருகின்றனர். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியகியுள்ளது.
நடிகர் செந்தில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.