”நான் மிசாவையே பார்த்தவன், ஐ.டி ரெய்டு எம்மாத்திரம்” - ஸ்டாலின் பதிலடி
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உள்ளது. இவரது கணவர் சபரீசன்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியலூரில் பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசியபோதுஐடி ரெய்டால் அதிமுகவை மிரட்டியது போல திமுகவை மிரட்ட பார்க்கிறார்கள்.
மோடிக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது திமுக. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம். மிசாவையே பார்த்தவன் நான். இந்த ஐடி ரெய்டு எம்மாத்திரம்' என பேசியுள்ளார்.