சேந்தமங்கலம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட உள்ளார் அதிமுக எம்.எல்.ஏ.
சேந்தமங்கலம் தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேட்சையாக போட்டியிடுகிறார் அதிமுகவை சேர்ந்த எம்.எல். ஏ. சேந்தமங்கலம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 30000 வக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் சந்திரசேகரன்.
இந்த நிலையில் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த 4 பேர் மீண்டும் போட்டியிடும் நிலையில் சந்திரசேகரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் தங்கமணி சந்திரசேகரன் பெயரை பரிந்துரைக்கவில்லை இது குறித்து அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனிடம் கேட்டபோது வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன்.
வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக களம் இறங்க உள்ளேன். கொல்லிமலையில் மணிக்கு மலைவாழ் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறேன் என்றார்.