சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு : 21 பேருக்கு தண்டனை அறிவிப்பு

Chennai Sexual harassment POCSO Crime
By Sumathi Sep 26, 2022 10:21 AM GMT
Report

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 21 பேருக்கு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி,

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு : 21 பேருக்கு தண்டனை அறிவிப்பு | Sentence In Chennai Child Abuse By Pocso Court

பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.

21 பேர் குற்றவாளிகள்

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட, இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு : 21 பேருக்கு தண்டனை அறிவிப்பு | Sentence In Chennai Child Abuse By Pocso Court

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தண்டனை அறிவிப்பு

இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரங்களை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார். அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.