ஒரு கேப்டன் இப்படியா விளையாடுறது - ஹர்திக் மீது அதிருப்தியை காட்டிய சீனியர் வீரர்கள்!!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick May 09, 2024 06:33 AM GMT
Report

மும்பை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 

ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை அணி, இந்த சீசனில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இது வரை 12 போட்டிகளில் விளையாடி அதில் 4'இல் மட்டுமே மும்பை வெற்றி பெற்றுள்ளது.

senior players disappointed on hardik pandya

இந்த ஆண்டு முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது. வீரர்களின் ஃபார்ம், அணியின் கூட்டடம் போன்றவை அணிக்கு பெரும் சவாலாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. 5 முறை கோப்பையை வென்ற அணியாக இருக்கும் மும்பை, கடந்த 3 ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை.

இத கவனிச்சீங்களா? மும்பையின் படுதோல்வி!! தப்பித்த ரோகித் - மாட்டிக்கொண்ட ஹர்டிக்!

இத கவனிச்சீங்களா? மும்பையின் படுதோல்வி!! தப்பித்த ரோகித் - மாட்டிக்கொண்ட ஹர்டிக்!

அதிருப்தி

அதன் காரணமாக தான் இந்த ஆண்டு அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டார். ஆனால், அதுவும் அணிக்கு பெரும் விமர்சனங்களை பெற உதவியது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தியது. அதற்கு ,முன்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

senior players disappointed on hardik pandya

அப்போட்டிக்கு பிறகு, நடைபெற்ற அணி கூட்டத்தில், அணியின் சீனியர் வீரர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் மீது பெரிய விமர்சனங்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

senior players disappointed on hardik pandya

10 ஆண்டுகள் கழித்து அணிக்கு புதிய கேப்டன் வந்த நிலையில், அவரால் அணியை சரியாக வழிநடத்த முடியவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. பொறுப்பை உணராமல், ஹர்திக் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதையும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.