முதியோருக்கான இலவச பேருந்து பயணம்: 39 மையங்களில் டோக்கன் விநியோகம்!

Tamil nadu
By Vinoja Jun 21, 2026 10:51 AM GMT
Report

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், ஜூலை–டிசம்பர் 2026 காலத்திற்காக மொத்தம் 60 இலவச பயண டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.டோக்கன் விநியோகம் ஜூன் 21 முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை சென்னை முழுவதும் உள்ள 39 மையங்களில் தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை சேவை வழங்கப்படும்.

முதியோருக்கான இலவச பேருந்து பயணம்: 39 மையங்களில் டோக்கன் விநியோகம்! | Senior Citizens To Receive Free Bus Travel Tokens

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 20 வரை சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாட்கள் மற்றும் நேரங்களில் டோக்கன்கள் பெறலாம்.

புதிய விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டை, வயதுச் சான்று (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/கல்விச் சான்றிதழ்) மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பழைய அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.