விசில் ஊதுங்க.. சளி சரியாகிடும்: தவெக செங்கோட்டையன்
K. A. Sengottaiyan
TVK
By Fathima
சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையில் தமிழகமே களைகட்டியுள்ள நிலையில் தவெக செங்கோட்டையன் பேசியது பொதுவெளியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருச்செங்கோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது, விசில் ஊதினால் சளி பிரச்சனை சரியாகும் என தெரிவித்தார், சிறு குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊத சொல்லுங்கள், சளி பிரச்சனை நின்றுவிடும், வயது முதிர்ந்தவர்கள் ஊதினால் இதயம் நன்றாக வேலை செய்யும், ஆரோக்கியமான மூச்சுப்பயிற்சி இதுதான், இதயம் நன்றாக இயங்கும் என தெரிவித்தார்.