திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி! அ.தி.மு.க. ஒரு கட்சியே கிடையாது: செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே எதிரி தி.மு.க. தான். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான்.அ.தி.மு.க. ஒரு கட்சியே இல்லை.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளார்கள்.
த.வெ.க. சார்பில் விருப்ப மனு அளிப்பதற்காக வந்த 15,000 பேர் திரும்பி சென்றதால் ஆன்லைனில் விருப்ப மனு அளிக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், த.வெ.க. கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள். குறுகிய காலக்கட்டத்தில் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.