மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி?செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - சிக்கலில் எடப்பாடி!
பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன்
கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பா அதிமுக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது பாராட்டு விழா மேடையில் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்படவில்லை.
இதன் காரணமாகத் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். இது அதிமுக வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி?
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரைத் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி வாகை சூடியிருந்தது.ஆனால் இந்தமுறை சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது என்று பேசினேன் என்று கூறியவர் வேறு எதுவும் பேச வில்லை என்று கூறினார்.
அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதுபற்றி பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன் என்று கூறினார்.