அதிமுகவிலிருந்து இன்னும் 15 பேர் வர உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்

ADMK Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam K. A. Sengottaiyan
By Karthikraja Oct 13, 2026 05:24 AM GMT
Report

sengottaiyan says another 15 admk mlas to join in tvk: ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏ க்கள், தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதில், 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று, அதிமுகவிலிருந்து வந்து வெற்றி பெற்றவர்கள், தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக எம்.எல்.ஏ ஆகி விட்டனர்.

அதிமுகவிலிருந்து இன்னும் 15 பேர்

இந்நிலையில், அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவிற்கு வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். 

அதிமுகவிலிருந்து இன்னும் 15 பேர் வர உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் | Sengottaiyan Says 15 Admk Mlas To Join In Tvk

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பின் அவரைப் போல ஒருவரைக் காணவில்லை.

நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை அக்கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து வந்ததால்தான், இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது, வருவாய் துறை அமைச்சராக உள்ளேன்.

இல்லையென்றால் நானும் எதிர் வரிசையில் நின்று தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு நேர் எதிரே உக்கார வச்சுருக்காங்க. நீங்கள்தானே நீக்கினீர்கள் இப்போது எங்கு அமர்ந்திருக்கிறார் பாருங்கள்னு.

யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் அதிமுக. மிக விரைவில் 15 பேர் அங்கிருந்து வெளியே வர இருக்கிறார்கள். நேற்று கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டுள்ளனர், என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம் என தெரிவித்தார்.