தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகும் செங்கோட்டையன்! முன்னாள் அமைச்சர் தகவல்

Vijay Tamil nadu K. A. Sengottaiyan TVK
By Vinoja Apr 17, 2026 08:24 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையன், கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தவெகவில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராக திகழ்வர் என்றால், செங்கோட்டையன் தான் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகும் செங்கோட்டையன்! முன்னாள் அமைச்சர் தகவல் | Sengottaiyan Likely To Leave Vijay Tvk

அதனை தொடர்ந்து விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். 8 முறை சட்டமன்ற உருப்பினராக இந்த செங்கோட்டையனை  விஜயும் எவ்வித தயக்கமும் இன்றி கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கோட்டையன் அவரின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்திலேயே போட்டியிடுகிறார். அவர் வழக்கம்போல் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையன், கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகும் செங்கோட்டையன்! முன்னாள் அமைச்சர் தகவல் | Sengottaiyan Likely To Leave Vijay Tvk

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், செங்கோட்டையன்  தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வெளியேறும் மனநிலையில் உள்ளார். அவர் தவெகவில் சேரும் முடிவை அவசரப்பட்டு எடுத்ததாகவும் வேறு யாரும் அந்த தவறை செய்துவிட வேண்டாம் என்று அவர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சிலரிடம் கூறி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தவுடன் அவர் விஜய்யுடனே இருப்பார் என்றும் அவரின் தலையீடு கட்சியில் அதிகம் இருக்கும் என்றும் அவரின் 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை தவெக கட்சியினர் பெற்றுக்கொள்வார்கள் என்றும்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.