செங்கோட்டையன் போட்டியிடும் தொகுதி! பரபரப்பில் அதிமுக
தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து வரும் அரசியல் பிரபலங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அரசியல் களம் பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அடுக்கிக்கொண்டே போகின்றனர்.
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுகளாக அதிமுக-வில் பணியாற்றியுள்ளேன், என்னை ஒரு நொடியில் எடப்பாடி பழனிசாமி தூக்கியெறிந்து விட்டார், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிடவுள்ளேன், இதற்கான விருப்ப மனுவையும் அளிக்கவுள்ளேன்.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோபி தொகுதியில் செங்கோட்டையன் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
குறித்த தொகுதியில் செங்கோட்டையன் வெற்றி பெற்றுதால், அவரை தோற்கடிக்க அதிமுக யாரை களமிறக்கும்? அவருக்கும் செங்கோட்டையனுக்கும் பலத்த போட்டி நிச்சயம் இருக்கும். அதிமுகவின் வாக்குகள் பிரியவாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.