யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கும் வரலாம்; ஆனா ஒரே கண்டிஷன் - செங்கோட்டையன்

Vijay Erode Thamizhaga Vetri Kazhagam K. A. Sengottaiyan
By Sumathi Dec 12, 2025 02:30 PM GMT
Report

யார் வேண்டுமானாலும் எங்களோடு கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி

ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோட்டில் டிசம்பர் 18ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணிக்குள் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார்.

vijay - sengottaiyan

டிசம்பர் 18ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை. ஈரோடு பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை எனும் இடத்தில் விஜய் பிரச்சாரம் நடைபெறும்.

ஜனவரிக்குள் இது கண்டிப்பாக நடக்கும் - செங்கோட்டையன் சூளுரை

ஜனவரிக்குள் இது கண்டிப்பாக நடக்கும் - செங்கோட்டையன் சூளுரை

செங்கோட்டையன் பேட்டி

தவெகவுடன் யார் வேண்டுமானாலும் எங்களோடு கூட்டணிக்கு வரலாம். ஆனால், முதல்வர் வேட்பாளர் த.வெ.க தலைவர் விஜய்தான். இதனை ஏற்றுக்கொண்டு வருபவர்களை நாங்கள் அரவணைப்போம். யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதைத் தலைவர் விஜய் முடிவு செய்வார்.

யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கும் வரலாம்; ஆனா ஒரே கண்டிஷன் - செங்கோட்டையன் | Sengottaiyan Calls Alliance With Tvk Anybody

ஈரோட்டில் ஏற்பாடுகளை சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறோம்.. வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என்ற முறையில் கூட்டணிக்கு வருகிறவர்களை வரவேற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.