ஈரோட்டில் ரோடு ஷோ நடத்தும் விஜய்? செங்கோட்டையன் விளக்கம்
தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு சுற்றுப்பயணம் குறித்து செங்கோட்டையன் பேசியுள்ளார்.
ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் தனது மக்கள் சந்திப்பை ஒத்தி வைத்திருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மீண்டும் மக்கள் சந்திப்பை அடுத்தது நடத்த திட்டமிட்டு வருகிறார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து, புதுச்சேரி விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 9 ஆம் தேதி, புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் விஜய் மக்கள் முன் உரையாற்ற உள்ளார்.
காலை 10.30 மணி முதல் 12 மணி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விஜய் 45 நிமிடங்கள் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மேடை அமைக்கப்படாமல் விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்று பேச உள்ளார். QR Code உடன் கூடிய அனுமதி அட்டை உள்ள 10,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
பார்வையாளர்களை 10 கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திற்குள் ஆயிரம் பேர் அமரும் வகையில் தடுப்பு கட்டைகளுடன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரியை தொடர்ந்து, வரும் டிசம்பர் 16 ஆம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
பொறுத்திருந்து பாருங்கள்
இதற்கு அனுமதி கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரிடம் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ரோடு ஷோ தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது எனவும், வாரி மஹாலுக்கு அருகே உள்ள தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உரிய அனுமதி கிடைத்த உடன் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் யாரும் இணைய உள்ளார்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்" என பதிலளித்துள்ளார்.