காங்கிரஸ் அதிக தொகுதிகள் கிடைக்க தவெக தான் காரணம்: செங்கோட்டையன்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகள் பெறுவதற்கு தவெக தான் காரணம் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேளைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இழுபறியில் இருந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி நேற்று முடிவுக்கு வந்தது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்தார்.
தவெக-வுடன் இணையலாம் என சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தவெக-வின் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், தவெக-வால் தான் காங்கிரஸ்க்கு பலன் கிடைத்துள்ளது.
எங்களை காட்டியே ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளை பெறுகின்றன, ஆட்சியில் பங்கு என தவெக அறிவித்ததே இதற்கு காரணம் என தெரிவித்தார்.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவெக-வுக்கு வர வாய்ப்புள்ளது, அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்காது, 18 முதல் 45 வயது வரை உள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
