அமித்ஷா சொன்னதை வெளியில் சொல்லமுடியாது - செங்கோட்டையன்
அமித்ஷா சொன்னதை வெளியில் சொல்வது அரசியல் நாகரீகமில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"ஒன்றிணைந்த அதிமுகவை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல முடிவு வரும்.
செங்கோட்டையன் தகவல்
அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பாஜக எனக்கு எப்போதும் என்னை அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை. நான் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்தேன். அவர்களிடம் பேசியதை வெளியே சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது.

அவர்கள் ஒரு முறை தான் அழைத்தார்கள். அடுத்து இருமுறை நானே சென்று சந்தித்தேன். விஜயுடன் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல இயலாது.
எல்லோரும் ஒன்றிணையும் காலம் விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்துள்ளார்.