புதிய பாரதமா? புரட்சி பாரதமா? கன்பியூஸ் ஆன முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ADMK AIADMK Erode
By Thahir Feb 10, 2023 04:36 AM GMT
Report

தனது கூட்டணிக்கட்சியின் பெயரை முன்னாள் அமைச்சர் பதற்றத்தில் மாற்றி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதாரித்துக்  கொண்ட முன்னாள் அமைச்சர் 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ச்சியாக உரையாற்றிக்கொண்டு இருந்தனர்.

புதிய பாரதமா? புரட்சி பாரதமா? கன்பியூஸ் ஆன முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் | Sengottaiyan A Former Minister Who Was Convicted

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கூட்டணிக்கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் கட்சியை கூறி உரையாற்ற அழைப்பு விடுத்தார்.

அந்த சமயத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பற்றுள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் உரையாற்ற நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது.

மேடையில் பேசிய செங்கோட்டையன் வார்த்தை தவறி புதிய பாரதம் கட்சியின் தலைவர் டாக்டர் பூவை ஜெகன் மூர்த்தி அவர்கள் உரையாற்றுவார்கள் என கூறினார்.

பின்னர் சுதாரித்து "புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அருமை சகோதரர் பூவை ஜெகன் மூர்த்தி சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள் உரையாற்றுவார்கள்" என கூறினார்.