ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க இயலாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
Tamil nadu
Madurai
By Thahir
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள், ரிக்ஷாக்களில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமர்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள், ரிக்ஷாக்களில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் பள்ளிக்கல்வித்துறைக்க உத்தரவிட்டு்ளளனர்.