பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் இதய ஈமோஜியை (Red Heart emoji) அனுப்பினால் சிறை..!
இதய ஈமோஜிகளை அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈமோஜி
வாட்ஸ்அப் இன்ஸ்டாங்கிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நாம் பிறரிடம் சாட்டிங் செய்யும்போது ஈமோஜிகளை அனுப்புவது வழக்கம். நாம் என்ன நினைக்கிறோம் என்ன உணர்கிறோம் என்பதை எழுதுவதுவதற்கு பதிலாக ஈமோஜிகள் மூலம் பிறருக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகிறோம்.
இதில் பலர் இதய ஈமோஜிகளை அதிகாமாக பயன் படுத்துகிறார்கள். ஆனால் இனி இந்த இதய ஈமோஜியை சிறுமிகளுக்கு அனுப்பினால் அது குற்றம் என்று அரசு தெரிவித்துள்ளது.
சிறை தண்டனை
அந்தவகையில் குவைத் நாட்டில் வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளுக்கு இதய ஈமோஜிகளை அனுப்பினால் அது குற்றம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2000 குவைத் தினார் அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் வழக்கறிஞர் ஹயா அல் ஷலாஹி தெரிவித்துள்ளார். இதேபோல், அண்டை நாடான சவுதி அரேபியாவில், 'ரெட் ஹார்ட்' எமோஜிகளை வாட்ஸ்அப்பில் அனுப்புவதும் சிறை தண்டனைக்கு விதிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 100,000 சவுதி ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும். இது பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடையதாக வரையறுக்கப்பட்டுள்ளது.