யாரும் செய்யாததையா அவர் செஞ்சுட்டாரு? கேமரா வச்சவன கைது பண்ணு - சீமான் ஆவேசம்!
தமிழக பாஜக கட்சி நிர்வாகி கே.டி ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவை சேர்ந்த கே.டி ராகவன் வழக்கறிஞராகவும், மாநில செயலாளராகவும் உள்ளார். இவர் வீடியோ அழைப்பில் பெண்களின் உடையை கழட்டுமாறு கூறி பூஜை அறையில் அருவருப்பான செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பத்திரிக்கையாளரும் பாஜகவை சேர்ந்தவருமான மதன் ரவிச்சந்திரன் மற்றும் அதே கட்சியை சேர்ந்த வெண்பா என்ற பெண்ணும் வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்தார். இந்த நிலையில் ராகவன் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவதுதானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.