SiDV-2026: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கருத்தரங்கம்

Chennai
By Yashini Feb 27, 2026 09:01 AM GMT
Report

சென்னையின் முதன்மையான பல்கலைகழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 16, 2026 அன்று தொற்றுநோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது.

இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும், உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைகழகமான எமோரி யூனிவர்ஸிட்டியின் அடிப்படை மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மையத்தின் துனணஅதிபரான டாக்டர். கியூநடா சில்சவஸ்டரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  

SiDV-2026: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கருத்தரங்கம் | Seminar Organized By Meenakshi Institute

மேலும் சென்னை பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி வேந்தரின் தற்போதைய ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர் S. P. தியாகராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தரான டாக்டர். C. ஸ்ரீதர், தொற்று நோய்களாலும் மற்றும் தொற்றா நோய்களாலும் இந்தியா சந்திக்கும் சாவல்ளை சுட்டிக்காட்டி இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கான தேவையையும் நோக்கத்தையும் தெளிவுரைத்தார். 

SiDV-2026: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கருத்தரங்கம் | Seminar Organized By Meenakshi Institute

இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தலைமை புரவலர் திருமதி. கோமதி இராதாகிருஷ்ணன், மற்றும் சார்பு வேந்தர் திரு.ஆகாஷ் பிரபாகர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை பற்றியும் அறிவியல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை நடத்த அவர்களின் முனைப்பை பற்றியும் அடிகோடிட்டார்.

இந்த கருத்தரங்கம் நான்கு அறிவியல் அமர்வுகளை உள்ளடக்கியது. அதில் 14 அறிவியல் வல்லுநர்கள் தங்கள் அறிவியல் கருத்துகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 

SiDV-2026: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கருத்தரங்கம் | Seminar Organized By Meenakshi Institute

எய்ட்ஸ், காசநோய், வைரஸ் சார்ந்த புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க தடுப்பு ஊசி தயாரிப்புகளில் இன்று நடக்கும் ஆராய்ச்சிகளை பற்றியும் அதை சார்ந்த மரபணு மாற்றங்களை பற்றியும் இந்த கருத்தரங்கில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை நடத்தியதன் மூலம் மருத்துவ கல்வியிலும் ஆராய்ச்சியில் உள்ள புதுமைகளை அறிவதிலும் உலக அறிவியல் ஈடுபாடுகளிலும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்புகள் வெளிப்படுகிறது.