மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த கோரிக்கை
கொரோனா நோய் பரவல் காரணமாக கல்லூரியில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்திய நிலையில் தேர்வை தற்போது நேரடியாக நடத்துவது ஏற்க முடியாது எனவும், அதனால் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தக்கோரியும் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால்கூட தாங்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்த செமஸ்டர் தேர்வை ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.