காதலை உறுதி செய்த பிரபல சீரியல் நடிகை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

sembaruthi parvathi
By Petchi Avudaiappan Sep 04, 2021 07:36 PM GMT
Report

முதன்முறையாக தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை சின்னத்திரை நடிகை ஷபானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த ஷபானா 2016 ஆம் ஆண்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தனது நடிப்பு திறமையால் Behindwoods விருது, ஆனந்த விகடன் விருது, கலாட்டா நட்சத்திர விருது, விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி என்ற பிரிவில் தொடர்ந்து மூன்று முறை ஜீ தமிழ் குடும்பம் விருதுகளை வாங்கி ஷபானா அசத்தியுள்ளார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன், “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என நடிகை ஷபானாவின் பெயரை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஷபானா தோழியின் பிறந்தநாள் கொண்டாடத்தில் தனது காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.