மிதக்க போகும் சென்னை! செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் இன்று திறப்பு

Chennai TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 03:11 AM GMT
Report

சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் பூண்டி, புழல் ஏரிகள் இன்று திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னைக்கு அருகில் மாண்டஸ்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.

இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மிதக்க போகும் சென்னை! செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் இன்று திறப்பு | Sembarambakkam Bundi Puzhal Lakes Are Opening

இந்த புயல் சென்னையில் இருந்து 270 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஏரிகளில் இருந்து நீர் திறப்பு 

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 270 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 200 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது.

மிதக்க போகும் சென்னை! செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் இன்று திறப்பு | Sembarambakkam Bundi Puzhal Lakes Are Opening

இந்த நிலையில், கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.