நடிகர் விஜய் சிலையுடன் இருக்கும் செம்பருத்தி பார்வதி! வைரல் புகைப்படம்
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து தொலைக்காட்சிக்கே பெருமை சேர்த்து சாதனை படைத்த சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஆபீஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான கார்த்திக்கும், ஹீரோயினாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த தொடரிலிரிலிருந்து கார்த்திக் ராஜ் விலகினார். அவரை தொடர்ந்து தொகுப்பாளர் அக்னி தற்போது ஆதியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ஷபானாவிற்கு தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
மேலும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வருவார்.

இந்நிலையில் ஷபானா மாஸ்டர் படத்தின் விஜய் சிலையை தனது கையில் வைத்தவாறு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை கண்ட அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.