யம்மாடி... படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் இப்படிப்பட்டவரா? - செல்வராகவனால் வெளியான உண்மை

dhanush Aishwarya rajinikanth selvaraghavan thalaivar169 naanevaruven தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து நானேவருவேன்
By Petchi Avudaiappan Feb 10, 2022 10:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 'நானே வருவேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் தனுஷின் கேரக்டர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

யம்மாடி... படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் இப்படிப்பட்டவரா? - செல்வராகவனால் வெளியான உண்மை | Selvaraghavan Revealed Dhanush Another Face

இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது முழுநேரமாக அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப் பின் மீண்டும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில்  தனுஷ் நடிக்கவுள்ளார். ஒரு கெட்டப்பில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ் இன்னொரு கேரக்டரில் நடுத்தர வயது தோற்றம் கொண்டவராக உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.