செல்வராகவனின் அடுத்தப் படம் இதுதான் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

selvaraghavan Mohan G செல்வராகவன்
By Petchi Avudaiappan Dec 04, 2021 11:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமான செல்வராகவன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

கீர்த்தி சுரேஷூடன் சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் அவர், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் ஜி அதிகாரபூர்வமாக செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.