பீஸ்ட் படத்தில் இந்த இயக்குனர் வில்லனா ? - வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

selvaraghavan Beast actorvijay Nelsondilpkumar BeastCastUpdate
By Irumporai Aug 07, 2021 11:00 AM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் விஜயுடன் பூஜாஹெக்டே நடித்து வருகிறார் இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் வில்லன் காதாபாத்திரம் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பீஸ்ட் படத்தில் வில்லனாக , முன்னணி இயக்குனர் செல்வராகவன் நடிக்கவிருக்கிறார் என அறிவித்துள்ளனர் இந்த செய்தி விஜய் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் ரசிகர்களையும் குஷிபடுத்தியுள்ளது.

மேலும் செல்வராகவன் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது