சந்தோஷமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது... - செல்வராகவன் ஆதங்கம்...!

Twitter Selvaraghavan Viral Photos
By Nandhini Mar 01, 2023 06:41 AM GMT
Report

ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது என்று இயக்குநர் செல்வராகவன் டுவிட் செய்துள்ளார்.

நடிகர் செல்வராகவன் -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் செல்வராகவன். இவர் படத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் சமீபத்தில் செல்வராகவன் 'சாணிக் காயிதம்' என்ற படத்தில் ஹீரோவாக முதன்முறையாக நடித்தார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

selvaraghavan-indian-film-director

பொறாமையாய் இருக்கிறது - செல்வராகவன் ஆதங்கம்

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான டுவிட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டுவிட்டை பார்த்த இவரது ரசிகர்கள் நிச்சயம் இது உண்மை... நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.