தனுஷ் படத்தின் தலைப்பு சர்ச்சை - விளக்கமளித்த செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு மாற்றப்படுவதாக எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை,மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய சசோதரர்களான தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் ஆயிரத்தில் ஒருவன்-2, நானே வருவேன் ஆகிய படங்களில் மீண்டும் இணைந்துள்ளது.
இதில் நானே வருவேன் படத்தை யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு ‘ராயன்’ என மாற்றப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் யக்குனர் செல்வராகவன் தனது செல்பி புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதில் ‘நானே வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தலைப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.