மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

selvaraghavan மாநாடு manaadu செல்வராகவன்
By Petchi Avudaiappan Dec 28, 2021 05:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கோரியுள்ள ட்வீட் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Selvaraghavan Asks Apology To Maanaadu Team

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாநாடு படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் மாநாடு திரைப்படம் வெளியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் மாநாடு படத்தை பார்த்து விட்டு நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  அதில் தாமதமாய் “ மாநாடு “ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். !! @SilambarasanTR_ , @iam_SJSuryah அருமை. நண்பர்கள் @thisisysr @vp_offl மற்றும் படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி ! என பதிவிட்டுள்ளார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் செல்வராகவன் அனைத்து விஷயத்திலும் தனித்து தெரிவதாக பாராட்டியுள்ளனர்.