‘தனுஷ் என் தம்பி இல்ல..அதை நான் மறக்கனும்’ - இயக்குனர் செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
படத்தில் நடிகர் தனுஷுக்கு கதாநாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது.
அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்தது.
இந்நிலையில் நானே வருவேன் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வராகவன் , 2 தேசிய விருது பெற்ற நடிகர், ஹாலிவுட் வரை சென்றிருக்கும் நடிகர், இவரை கையாள வேண்டும் என்றால் முதலில் அவர் என் தம்பி என்பதை மறக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.