முகத்தை மூடிக்கொண்டா சென்றார்? எடப்பாடிக்கு செல்வபெருந்தகை பதிலடி
சிங்கப்பெண்ணாக நேரில் சென்று ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்தார், முகத்தை மூடிக்கொண்டா சென்றார் என எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வபெருந்தகை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது திமுக-வின் நிலைப்பாடு குறித்து கனிமொழி எடுத்துரைத்ததாகவும், தொகுதி பங்கீடு குறித்து விவரங்களை காங்கிரஸின் அதிகார குழு மூலம் விவாதிக்கப்பட வேண்டும் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி முதல் வாரத்தில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது.
இச்சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதா? இல்லையா? என தடுமாறுகிறது, வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, எடப்பாடி பழனிச்சாமி போல் கனிமொழி எம்பி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை.

சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். ஒரு வார காலத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸ் தலைமை, திமுகவின் தலைமையும் இணைந்து முடிவு செய்யும்.
எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவிற்கு நெருக்கடிகளை அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.