கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம்..பா.ஜ.க சூழ்ச்சி -செல்வப்பெருந்தகை!

Amit Shah Tamil nadu K. Selvaperunthagai
By Vidhya Senthil Feb 27, 2025 02:19 AM GMT
Report

மாநில அரசின் அரசியல் அதிகாரங்களை தன்னகத்தே குவிப்பதற்கு சட்டவரைவு மசோதாக்களை திருத்துவதாக என செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

 பா.ஜ.க.

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் நெருங்கி விட்டதாக கூறிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு வன்மையா கண்டனங்களை தெரித்துக் கொள்கிறேன்.நாட்டில் உள்ள மக்களை மதம், மொழி என்று பிளவுப்படுத்தி ஆட்சி செய்கிறது பா.ஜ.க.

கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம்..பா.ஜ.க சூழ்ச்சி -செல்வப்பெருந்தகை! | Selvaperunthagai Condems Amit Shah Anti National

மேலும்,பாஜக ஆளாத மாநிலங்களை கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்த முயற்சி செய்கிறது.மாநில அரசின் அரசியல் அதிகாரங்களை தன்னகத்தே குவிப்பதற்கு சட்டவரைவு மசோதாக்களை திருத்துகிறது.பா.ஜ.க. அரசு.

 செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இவர்களின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்ட காரணத்தால், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கூட வெற்றியைக் கொடுக்காமல் தேர்தலில் விரட்டியடிக்கிறார்கள்.

கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம்..பா.ஜ.க சூழ்ச்சி -செல்வப்பெருந்தகை! | Selvaperunthagai Condems Amit Shah Anti National

நாள்தோறும் மக்கள் நலனுக்கு திட்டங்களை தீட்டி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்கள் விரோத கொள்கைகளை கொண்டிருக்கும் பா.ஜ.க.வினரின் முகமூடியை மக்களிடம் தோலுரித்துக் காட்டினால், ஆளும் தமிழ்நாடு அரசை தேச விரோத அரசு எனக்கூறுவதா?. என தெரிவித்துள்ளார்.