தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்...உலக அரசியல் செய்யப் போகிறாரா? செல்வப்பெருந்தகை!
அண்ணாமலை ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம் என செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. அதன் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.
முதலமைச்சர் மீதும் அவதூறு பேசுவது வாடிக்கையாகி விட்டது.எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள. இவரைப்போல் யாரிடமும் வெறுப்பும், திமிறும், ஆணவமும் இல்லை. காங்கிரஸ் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.
உலக அரசியல்..
முதலில் ஜன நாயகத்தை படிக்க வேண்டும். நான் காங்கிரஸ் பற்றி பேச தயார். நீங்கள் ஜனசங்கம், இந்து மகாசபா பற்றி பேச தயாரா? தன் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயற்சித்த விவகாரம், சிருங்கேரி மடம் முதல் பல விசயங்களை நாங்களும் தூசு தட்டுவோம்.
முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ வெளிநாடுகளுக்கு செல்கிறாரே முதலீடுகளை கொண்டு வந்தாரா? முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குத்தான் ஆதரவாக இருப்பாராம். தமிழக அரசியலில் தோற்றுப்போனவர். இப்போது உலக அரசியல் செய்யப் போகிறாராம். ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.