வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு - பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!

Indian National Congress Tamil nadu Narendra Modi Chennai Lok Sabha Election 2024
By Jiyath May 08, 2024 09:08 AM GMT
Report

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

செல்வப்பெருந்தகை 

பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு - பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு! | Selvaperundagai Case Against Pm Modi

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரசாரம் செய்து வருகிறார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி மதக் கலவரத்தை உருவாக்க முறிச்சித்து வருகிறார்.

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி!

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி!

தவறான கருத்துகள் 

தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு - பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு! | Selvaperundagai Case Against Pm Modi

இந்த மனுவில் பிரதமரின் பெயரை சேர்த்திருப்பதால் பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.