அ.தி.மு.க. எக்ஸ்பிரஸில் ஏறினால் டெல்லி செல்வார்கள் : செல்லூர் ராஜூ பேட்டி

ADMK
By Irumporai Nov 18, 2022 10:08 AM GMT
Report

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

 செல்லூர் ராஜூஅ.தி.மு.க

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூஅ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களின் நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.

அ.தி.மு.க. எக்ஸ்பிரஸில் ஏறினால் டெல்லி செல்வார்கள் : செல்லூர் ராஜூ பேட்டி | Sellur Raju Says Only Dravidian Movements

அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று கூறினார்.

பழனிச்சாமி வழிநடத்துவார்

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க. கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது.

தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்