இபிஎஸ் விக்கிரமாதித்தன் போல் - சாகசம் பண்ணுவாரு பாருங்க..!! செல்லூர் ராஜு
விக்ரமாதித்தன் கதை போல கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் சாகசம் நிகழ்த்துவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
புத்தாண்டை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,“விக்கிரமாதித்தன் கதை போல் அதிமுகவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சாகசங்களை நிகழ்த்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த 2024 ஆம் ஆண்டில் எதுவும் விரும்பத்தகாத நிகழ்வுகள், புதிய வைரஸ் தாக்குதல் இல்லாமல் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அவர், இந்த ஆண்டு மக்கள் அதிமுகவுக்கு பெரிய மகிழ்ச்சியை மக்கள் கொடுக்க உள்ளனர் என்றும் கூறினார்.
அதிமுக ஆட்சி....
மேலும், அதிமுகவின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்று உறுதிப்பட தெரிவித்து, மக்கள் அனைவரும் அதிமுக ஆட்சி அமையவே விரும்புகின்றனர் என்றும் புயல், மழை என அனைத்து பேரிடர் காலங்களிலும் அதிமுக அரசு சிறப்பாக பணிகளை முடுக்கிவிட்டது என குறிப்பிட்டார்.
மக்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புகளுக்கு ஈடு செய்யும் அளவுக்கு கொடுக்க முடியாவிட்டாலும், அதிமுக மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் செய்தோம் என்றும் தெரிவித்தார்.