தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி: செல்லூர் ராஜூ புகழாரம்
நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்று இருக்கும் தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி என்றும் அவர் நிதி அமைச்சக பொறுப்பை சரியாக கவனிப்பார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார்.
தங்கம்தென்னரசு
சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் தங்கம் தென்னரசுக்கு நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது
செல்லூர் ராஜூ பாராட்டு
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் இடம் பேசியபோது நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி என்றும் எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்க கூடியவர் என்றும் பிறரை தரகுறைவாக பேச மாட்டார் என்றும் தெரிவித்தார்.
முந்தைய துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டது போல் நிதி துறையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.