அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி - செல்லூர் ராஜு பதிலடி
அண்ணாமலை கூறும் கருத்துக்களை குறித்து பெரிதாக பொருட்படுத்தப்போவதில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளா
அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு
ஓபிஎஸ் பற்றி அண்ணாமலை நடைப்பயணத்தின் போது கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு செல்லூர் ராஜு அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இது குறித்து பேசிய அண்ணாமலை அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியதில்லை என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
கத்துக்குட்டி அண்ணாமலை
அண்ணாமலையின் இந்த கருத்தித்திற்கு தற்போது செல்லூர் ராஜு அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று விமர்சித்திருக்கிறார்.
மேலும் அதிமுக மீது ஒரு துரும்பை வீசினால் கூட, பதிலுக்கு இரும்பை எறிவோம் என்று எச்சரித்து, கட்சியில் இணைந்து ஒரே ஆண்டில் தான் தலைமை பதவிக்கு வரவில்லை என குறிப்பிட்டு, படிப்படியாக உயர்ந்து தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தன்னை பற்றியும் தனது பணி குறித்தும் மக்களுக்கு தெரியுமே என பதிவிட்டு, ஆகையால் அண்ணாமலையின் கருத்தை பொருட்படுத்த போவதில்லையே என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.