என்னுடைய தாய்மார்களாகிய உங்களை நாடி வந்திருக்கிறேன்: செல்லூர் ராஜூ உருக்கம்
என்னைப் பெற்ற தாயும் இல்லை, வளர்த்த தாயும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கமாகப் பேசினார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாக செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இன்று தாராபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், ஜீப்பில் நின்றுகொண்டு திறந்த வெளியில் செல்லூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், 'நான் காரில் வரும்போதுதான் அமைச்சர். காரிலிருந்து கீழே இறங்கிவிட்டால் நானும் சமுதாயப் பிரதிநிதி. நானும் அதிமுக தொண்டன். இந்நேரத்தில் என்னைப் பெற்ற தாயும் இல்லை.
வளர்த்த தாயும் இல்லை. இருப்பினும் என்னை வளர்த்த தாய்மார்களாகிய, என்னை உலகறியச் செய்த மதுரை மேற்கு தொகுதி மக்களை நாடி வந்திருக்கிறேன்' என்று உருக்கமுடன் பேசினார்.